in

400 ஆண்டு பழமையான நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்

400 ஆண்டு பழமையான நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கட்கிழமை அன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமையொட்டி காலை 108 சங்காபிஷேகமும் மாலை 1008 சங்காபிஷேகம் நடந்தது கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு பால்,பனீர்,இளநீர், சந்தனம்,ஜவ்வாது,மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.பின் கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது இதில் நத்தம்,கோவில்பட்டி,சிறுகுடி,வத்திப்பட்டி, மூங்கில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

நாகையில் நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி 100 தெரு நாய்களுக்கு கறி விருந்து போட்டு அசத்தியுள்ளனர்

பழனியில் சபரிமலை ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்