கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு மத்தியார்ஜூனமாக போற்றப்படும் திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் 1008 சங்காபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பிரசித்தி பெற்ற பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமாகவும் சகலதோஷ நிவர்த்தி தலமாகவும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கும் பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை முதல் சோமவாரத் தினத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் பூஜிக்கப்பட்ட 1008 புனித நீர் கொண்ட சங்குகளும் புனித நீர் கொண்ட கலசங்களும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்கிட புனித நீர் ஊற்றப்பட்ட சங்குகள் மற்றும் கலசங்கள் எடுத்துவரப்பட்டு கோயிலின் மூலவரான மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் நடந்த இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்