in

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு 1008 சங்கு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு 1008 சங்கு அபிஷேகம்

 

உலகப் பிரசித்த பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாதம் கடைசி திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தையொட்டி தஞ்சை பெரிய கோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு பால், தயிர், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், சந்தனம் , மஞ்சள் , அன்னம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெருவுடையாருக்கு முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிக் பாஸ் Rule…சை மீறிய சிவகார்த்திகேயன்… மாட்டிகிட்ட Contestants