in ,

சிரமம் அருள்மிகு ஶ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு

சிரமம் அருள்மிகு ஶ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு

சிவகங்கை மாவட்டம் சாத்தரசன் கோட்டை அருகே உள்ள சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்றது முன்னதாக திருக்கோவில் அருள்பாலிக்கும் ஏழுமுக காளியம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன

தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் வரிசையாக அமர்ந்து சிவாச்சாரியார் தலைமையில் திருவிளக்கு பூஜை செய்து அம்மன் வழிபட்டனர் விளக்கு பூஜை கூட்டு வழிபாட்டில் குடும்ப நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் வழிபாடு செய்தனர் விளக்கு பூஜையில் மங்கல பொருட்களை வைத்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை துவங்கினர் தொடர்ந்து 1008 திருவிளக்கு போற்றி மந்திரங்கள் ஜெபித்து திருவிளக்கிற்கு குங்குமம் மற்றும் உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்தனர் நிறைவாக திருவிளக்கிற்கு கற்பூர ஆராதனை காட்டி வழிபட்டனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழு முக காளியம்மனை வழிபட்டனர்

What do you think?

நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார்கோயிலில் மகா அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை

செங்கத்தில் அறநிலைக்கு சொந்தமான பச்சையம்மன் ஆலயத்தில் 103 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா