in

கரூர் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் 101 ஆஷாட ஏகாதசி விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் 101 ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு சுவாமியை தொட்டு தரிசிக்கும் பூலோக சொர்க்க திருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு 101 வது ஆண்டை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி முன்னிட்டு கருவறைக்குச் சென்று சுவாமியை தொட்டு தரிசிக்கும் பூலோக சொர்க்க திருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு உற்சவர் பண்டரிநாதன், ருக்குமணி தாயார் மற்றும் மூலவர் பண்டரிநாதன், ருக்மணி தாயார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் தீர்ந்த இளநீர் எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்று அது தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்து ஏராளமான பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமி தொட்டு தரிசித்து தங்களது நேர்த்திக்கடனையும் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஆலய மண்டபத்தில் உற்சவர் பண்டரிநாதன் மற்றும் ரகுமாரி தாயார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்ற தொடர்ச்சியாக ஆலயத்தின் பூசாரி சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டினார்.

தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை அருள்மிகு பண்டரிநாதன் ஆலயத்தில் ஆஷாட ஏகாதேசி முன்னிட்டு கருவறைக்கு சென்று சுவாமி தொட்டு தரிசிக்கும் பூலோக சொர்க்கத் திருநாளை முன்னிட்டு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்

What do you think?

உலக நலன் வேண்டி நாமக்கல் பரமத்தி அருகே பீமேஸ்வரர்சிவ ஆலயத்தில் ருத்ர ஹோமம்

தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா