புதுச்சேரியில் 101 டிகிரி வெயில்.. அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரியில் கடந்த பிப்வரி மாதம் முதல் கோடை வெயில் அதிகமானது.அடுத்து இரு மாதங்களில் மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் கடும் வெப்ப அலையாய் மாறியது.
அடிக்கடி 100 டிகிரியை புதுச்சேரி தொட்டு மக்களை மிரட்டியது.இந்த நிலையில் திடீர் பெய்த மழை காரணமாக புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றும் சாரம் மழையும் என மக்கள் மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் வெப்பம் குறைந்ததால் கடந்த 3 நாட்களாய் சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மீண்டும் வானிலை மாறி புதுச்சேரியில் 3 வது நாளாக காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. மதிய வேளையில் அனல் காற்றுடன் வெயில் வீசியது. நகர பகுதிகளான நேரு வீதி, காந்தி வீதி, காமராஜ் சாலை, அண்ணா சாலை, துறைமுக வளாகம், விமான நிலையம் மற்றும் கடலோர கிராமங்களில் 101 டிகிரி வெயில் அளவு வீசியது. இதனால் கடுமையான அனல் காற்று வீசியது.
இதனால் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, வர்த்தகப் பகுதிகளான அண்ணா சாலை, நேரு வீதி,காந்திவீதி, காமராஜ் சாலை, புஸ்சி வீதி ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில வாகனங்கள் மட்டுமே சாலைகளில் காண முடிந்தது.
ஏற்கனவே அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக பெருவளவில் மக்கள் வெளியே வரவில்லை. மீறி பணி நிமிர்த்தமாக வந்த வாகன ஓட்டிகள் மிக அவதிப்பட்டனர்….