in

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா

 

மறைந்த முன்னாள் முதல்வரும், திருக்குவளையில் பிறந்த மு. கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த இல்லத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு திமுகவினர் மலர்மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா திருக்குவளையில் அவர் பிறந்த இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

நாகை மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள அவரது தந்தை முத்துவேலர் தாயார் அஞ்சுகம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து திருக்குவளை கடைவீதி பகுதியில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது தொடர்ந்து திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலினை நாகை மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான என். கௌதமன் திறந்து வைத்தார்.

பின்னர் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து திருக்குவளை கருணாலயா முதியோர் இல்லத்தில், வசிக்கும் முதியோர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

What do you think?

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது

நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான்- ஓ பன்னீர்செல்வம்  பேட்டி