in

குடிநீர் திட்டத்திற்காக தமிழக முதல்வர் 1028 கோடி ரூபாயை வழங்கியுள்ளார்

குடிநீர் திட்டத்திற்காக தமிழக முதல்வர் 1028 கோடி ரூபாயை வழங்கியுள்ளார்

 

நெல்லை மாவட்டத்திற்கு குடிநீர் திட்டத்திற்காக தமிழக முதல்வர் 1028 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இதன் மூலம் 96 ஆயிரம் வீடுகளுக்கு குடி நீர் இணைப்பு வழங்கப்படும் இந்த திட்ட பணிகள் 15 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஊராட்சி அலுவலகம் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு மாவட்ட ஊராட்சி அலுவலகம் இங்கு கொண்டு வரப்பட்டு அதன் திறப்பு விழா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன் தீப்சிங்பேடி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் சபாநாயகர் பேசுகையில் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஊராட்சி பள்ளி கட்டிடம், சமத்துவபுரம் வீடுகள், ஆதிதிராவிடர் நலதுறை சார்ந்த கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து இருந்தது, இருப்பதை பாதுகாக்க வேண்டும் என திமுக ஆட்சி அமைந்ததும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகளை மேம்படுத்த முதல்வர் சாலை மேம்பட்டு திட்டத்தில் நமது மாவட்டத்திற்கு மட்டும் வருடத்திற்கு 250 கோடி வீதம் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திற்காக பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு 605 கோடி நிதியும் , களக்காடு நகராட்சி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி உள்பட 7 பேரூராட்சிகள் பயன் பெரும் வகையில் 423 கோடி ரூபாய் என முதல்வர் மொத்தத்தில் குடிநீர் திட்டத்திற்காக 1028 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கான பணிகள் நடந்து வருகிறது , இந்தப் பணிகள் இன்னும் 15 மாதகாலத்திற்குள் நிறைவடையும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது முன்னதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன் தீப்சிங்பேடி மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திகுளம், கரிசல்குளம் இடையே சிற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப் பணிகள், கங்கைகொண்டானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவற விட்டுவிட்டார்.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு