செங்கத்தில் அறநிலைக்கு சொந்தமான பச்சையம்மன் ஆலயத்தில் 103 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பட்டாணி கொள்ளை செய்யாற்றங்கரை ஒட்டி அமைந்துள்ள பச்சையம்மன் கோவிலில் 103 ஆம் ஆண்டு திமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
குழைந்தை வரம் திருமண வரம் வேண்டி வேண்டுதல் வைத்து நிறைவேறிய 200க்கும் மேற்ப்பட்டோர் 15 காப்பு கட்டி விரதம் இருந்து ஆலயத்தின் எதிரே அமைத்துள்ள தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்
ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழாவை காண செங்கம் அதன் சுற்று வட்டாரப் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அழித்த பச்சையம்மனை தரிசனம் செய்தனர்