in

நாமக்கல் பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் ஆலயத்தில் பாணலிங்கேஸ்வரருக்கு 108 சங்கு பூஜை

நாமக்கல் பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் ஆலயத்தில் பாணலிங்கேஸ்வரருக்கு 108 சங்கு பூஜை

 

நாமக்கல் மாவட்டம் – பரமத்திவேலூரில் 500 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள பானலிங்க சிவ விஷ்ணு ஆலயத்தில் உள்ள பானலிங்க விஸ்வேஸ்வரருக்கு 25.11.24 கார்த்திகை மாத சோம வாரம் 2-ம் திங்கட்கிழமையினை முன்னிட்டு 108 வலம்புரி சங்க அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிகழ்வாக பானலிங்க விஸ்வேஸ்வரருக்கு 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து 108 வலம்புரி சங்கு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பானலிங்க விஸ்வேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சோடஷ உபசாரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

அரசு மதுபான கடை ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை

மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள்