சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத இரண்டாவது சோமவார திருநாளை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் ஆராதனை நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவார திருநாளை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது முன்னதாக சுவாமி சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 108 வெண் சங்குகளை கலசத்தை சுற்றி வைத்து பூக்களால் அலங்கரித்தனர் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கணபதி பூஜை ஜெப பாராயணம் சங்கல்ப பூஜை நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து மூலவர் சசிவர்னேஸ்வரர் சுவாமிக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் உள்பிரகாரம் சுற்றி வளம் வந்து மூலவர் சுவாமிக்கும் அம்பாளுக்கும் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீராலும் 108 வெண் சங்குகளில் உள்ள புனித நீராலும் அபிஷேகம் நடைபெற்றன பின்னர் தங்க கவசம் அணிவித்து வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக ஏழுமுக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை வழிபட்டனர்.