in

திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

 

கார்த்திகை மாத இரண்டாவது சோம வரத்தை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானத்தில் மிகவும் பழமையான பல்வேறு சிறப்புகளை உடைய அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவராலும் பாடல் பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் நேற்று கார்த்திகை மாத இரண்டாம் சோமவரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய 108 சங்குகள் மற்றும் கடங்கள் வைத்து சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு மகா பூர்ணாகுதி செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

புனித நீர் அடங்கிய கடங்கள் மற்றும் சங்குகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமிக்கு அபிஷேக செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்து வழிபட்டனர்.

What do you think?

பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தரங்கம்பாடி பகுதியில் பலத்த மழை