in ,

கூத்தாண்டன் அருள்மிகு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோவில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

கூத்தாண்டன் அருள்மிகு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோவில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டன் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு 108 ஷங்காபிஷேகம் நடைபெற்றது இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தேவியர்களுடன் சண்முக பெருமானாக அருள் பாலித்து வருகிறார் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத் தினத்தை முன்னிட்டு முருகப்பெருமான் முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட வெண் சங்குகளை சிவ லிங்கம் வடிவில் வைத்து ரோஜா பூ கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து கலசங்களை வைத்து கணபதி பூஜையுடன் சங்காபிஷேக பூஜை நடைபெற்றது முருகப்பெருமானின் மூல மந்திரங்கள் கூறி வெண் சங்குகளுக்கு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகளை செய்து ஏழு முக தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று 108 வெண் சங்குகள் மற்றும் கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று உதிரி புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக ஏழு முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

What do you think?

சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 260 பேரை அமரன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்

திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு