in ,

சோமவாரத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு 108 சங்காபிஷேகம்

சோமவாரத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு 108 சங்காபிஷேகம்

 

சிவகங்கை ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் கார்த்திகை நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு சிவபெருமான் மற்றும் முத்துக்குமார சுவாமி இரண்டு சிவலிங்கமாக அருள் பாலித்து வருகிறார் நான்காவது சோமவார தினமான இன்று சுவாமி சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 108 வெண் சங்குகள் சிவலிங்க வடிவமாக வைத்து மற்றும் நவ கலசங்களை வைத்தும் மலர்கள் கொண்டு அலங்கரித்தனர்.

தொடர்ந்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது சுவாமியின் மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் சமர்ப்பித்து பட்டு வஸ்திரம் பூர்ணாகுதி அளிக்கப்பட்டன தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மூலவர் இரண்டு சிவலிங்கத்திற்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பலவகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத் அடுத்து வேத மந்திரங்கள் முழங்க 108 வெண் சங்குகள் மற்றும் கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

நிறைவாக ஏழு முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்தனர்.

What do you think?

நட்சத்திரம் அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக அரிசி மளிகை பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க பட்டது

தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்