தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 1098 மாணவிகள் 1098 எண் வடிவத்தை அமைத்து உலக சாதனை
சிவகாசியில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 1098 மாணவிகள் 1098 எண் வடிவத்தை அமைத்து உலக சாதனை நிகழ்த்தினர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தனியார் பள்ளி மைதானத்தில் தேசிய பெண்குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 வடிவத்தை உருவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், பெண் கல்வி அவசியம் பற்றிய குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 விழிப்புணர்வு குறித்த உலக சாதனை நிகழ்வில் “1098, 6-10ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 1098 எண் வடிவில் நின்று உலக சாதனை” நிகழ்த்தினர்.
இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு உலகசாதனை நிகழ்வு காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.