in

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 11 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை 

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 11 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை 

 

முத்துப்பேட்டையில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர் ஊர்வலம் இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெற உள்ளது.

விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைக்க உள்ளார். விநாயகர் ஊர்வலமானது ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு தர்கா ஆசாத் நகர் திருத்துறைப்பூண்டி சாலை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பாமணி ஆற்றங்கரையில் கரைக்கப்பட உள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் மூன்று டிஐஜிக்கள் 11 எஸ் பி 11 ஏ டி எஸ் பி உள்ளிட்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக நகரின் முக்கிய வீதிகளில் தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 11 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

What do you think?

பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் திருப்பவித்ரோஸ்தவம்

பழனியில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன