கஞ்சா வழக்கில் 12-பேர் கைது- 1,250 கிராம் (1-1/2 கிலோ) கஞ்சா கைப்பற்றப்பட்டது
கடலூர் மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில்,துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு .லாமேக் அவர்களின் மேற்பார்வையிலும், கஞ்சா விற்பனையாளர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, காலை 10மணியளவில் அண்ணாமலை நகர் பல பட்டறை சுடுகாடு அருகே 12 நபர்கள் 1 கிலோ கஞ்சாவை வியாபாரத்திற்காக வைத்துக்கொண்டு விற்பனைக்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்தவர்களை அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கர் உதவி ஆய்வாளர்கள் திரு. அன்பழகன் மற்றும் திரு. மகேஷ், கஜேந்திரன்,காவலர்கள் திரு. மணிகண்டன் திரு. ஐயப்பன் திரு. ரமணி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும். எதிரிகள்:
1)போண்டா என்கின்ற நவீன் ராஜ் வயது 26 ஓமக்குளம்.
2)விக்னேஷ் குமார் வயது 22 சிவசக்தி நகர்,
3)லாலி (எ) சூர்யபிரகாஷ் வயது- 20
அண்ணாகுளம் வடக்கு மெயின் ரோடு.
4)நவீன் குமார் என்கின்ற ரத்ன சபாபதி வயது 19
கனகசபை நகர்.
5)கவி பாரதி வயது-21 எம்.கே.தோட்டம்.
6) ஹரிபிரசாத் வயது-20 எடத்தெரு.ஓமகுளம்.
7)சத்தியமூர்த்தி வயது 18.சாலியந்தோப்பு
8)சத்திய நாராயணன் வயது 23 விபீஷ்னபுரம்.
9) மணிக்கதிர் வயது-18 அம்மாபேட்டை.
10)குண செல்வம் வயது 18 திருவேட்களம்.
11)தேவராஜ் வயது 18 கோவிலாம்பட்டி
12)லாரன்ஸ் வயது 21 ஜம்பு குளம் மண் ரோடு.ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.