in

தடை செய்யப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்

 

வத்தலகுண்டு அருகே தடை செய்யப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் 2 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சித்தரேவு கோட்டை முனியாண்டி கோவில் அருகே உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஒரு கடையில் அதிரடியாக நுழைந்த தனிப்படை போலீசார் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக 12 ஆயிரம் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் மேலும் லாட்டரி விற்பனை செய்த ரொக்க பணம் ரூபாய் 28 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ராமராஜ், மகேந்திரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அப்பளம் முருகன் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

ஐஸ்வர்யா ராயின் ஜோதா அக்பர் லெஹங்கா ” அகாடமி மியூசியத்தில் இடம் பிடித்துள்ளது

சிக்கன் ஃபிரைடு ரைஸில் புழு இருந்தாக வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் புகார்