கன மழை காரணமாக மேலாநல்லூர் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. மணல்மேடு பகுதியில் 60 மில்லி மீட்டர் வரை மழை பெய்தது. இதன் காரணமாக வயல்வெளிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பட்டவர்த்தி அருகே மேலாநல்லூர் கிராமத்தில் கனமழை காரணமாக வயல் வழிகளில் இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 120 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேப்பூர் வாய்க்கால், சேத்தூர் வாய்க்கால், மாந்தோப்பு வாய்க்கால் ஆகிய மூன்று வடிகால்கள் திமுக ஆட்சியில் தூர்வாரப்படாத காரணத்தால் பெய்த மழை நீர் வெளியேற வழியின்றி பயிர்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் . மூன்று நாட்களில் தண்ணீர் வடியா விட்டால் பயிர்கள் அழுகி பெருத்த சேதம் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.