121 பெண்கள் பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் ஆடியபடி விடிய விடிய கிரிவலம்
அண்ணாமலையார் மீது கொண்ட பக்தியால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 121 பெண்கள் பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் ஆடியபடி விடிய விடிய கிரிவலம்…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர்.
அண்ணாமலையார் மீது கொண்ட பக்தியின் காரணமாக பல்வேறு நடன குழுவினர்கள் கிரிவல பாதையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சார்ந்த ஸ்ரீமன் நாராயணா பக்தி கோலாட்ட குழுவைச் சேர்ந்த 121 பெண்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து அண்ணாமலையாரை வழிபட்டு சிவன் பாடல்கள், பெருமாள் பாடல்கள், அன்னமையா கீர்த்தனா உள்ளிட்ட பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் ஆடியபடி 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் விடிய விடிய நிலவு ஒளியில் கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்தக் குழுவினர் ரமணாசிரமருகே சென்ற பொழுது இதனைக் கண்ட வெளிநாட்டு பக்தர் ஒருவர் அவருடன் இணைந்து பக்தி பரவசத்துடன் கோலாட்டம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.
14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் பக்தி பாடல்களை பாடியவாறு கோலாட்டம் ஆடி சென்றது அனைவரையும் கவர்ந்தது.