12,700 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் தாக்கல்
உள்நாட்டு நிதி வருவாயாக ரூ.6,914 கோடியாகவும், மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடியும், நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2, 066 கோடி கடன் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரங்கசாமி பேரவையில் தகவல்
புதுச்சேரியில் மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்
பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்
இலவச அரிசி மாணிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவிப்பு.
குடிமை பொருள் வழங்கல் துறையு மூலம் அனைத்து சேவைகளும் இணைய வழியில் செயல்படும். பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர்
புதுச்சேரி மடுகரைப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியை 15 கோடி ரூபாய் செலவில் முன்மாதிரி கலைக் கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்….
இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஹாக்கி திடல் அமைக்கப்படும்…
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 6500லிருந்து 8000 ஆக உயர்வு.. மழைக்கால நிவாரத் தொகை 3000 லிருந்து 6000 ஆக உயர்வு… பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு…
புதுச்சேரியில் ஆயுஸ் மருத்துவப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் உள்ள உப்பனார் வாய்க்காலை 29 கோடி ரூபாய் மாநில அரசின் முழு செலவுடன் கட்டப்படும்….
500 கோடி ரூபாயில் ராஜிவ்காந்தி சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை வரை மேம்பாலம் கட்டுவதற்கான விரிவான திட்டங்களை தயாரித்து மேம்பாலத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்
புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்.
புதுச்சேரி பிராந்திய அளவில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை.
பாடப்பிரிவு வாரியாக 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்க ரூ.5,000 ஊக்கத்தொகை.