in

புதுச்சேரி 2024 25 ஆம் ஆண்டு பட்ஜெட்டிற்கு 12,700 கோடி இறுதி செய்யப்பட்டுள்ளது


Watch – YouTube Click

புதுச்சேரி 2024 25 ஆம் ஆண்டு பட்ஜெட்டிற்கு 12,700 கோடி இறுதி செய்யப்பட்டுள்ளது

 

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கான மாநில திட்டக்குழு கூட்டம் இன்று கூடியது.

துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் உயர்அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு கடந்த பிப் 22ம் தேதி ஒப்புதல் பெறப்பட்டது.. 5 மாத அரசு செலவீனத்திற்கு 4634கோடி ரூபாய்க்கான
இடைக்கால பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி
தாக்கல் செய்தார்.

2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்காக தொகையை மாநில திட்டக்குழு முடிவு செய்தது. இதில் 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட்டிற்கான தொகையாக 12,700 கோடி ரூபாய் இறுதி செய்யப்பட்டதாக துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு அறிவித்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தாய்மார்களின் கருத்தை அறிந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

மாநில திட்ட குழு இறுதி செய்த தொகை ககுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் சட்டமன்றத்தை கூடி முழு பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்ய உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு என பிரத்தியேக பாடல் வெளியீடு

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக முற்றுகை..கைது