in

13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

 

மாநிலம் முழுவதிலும் மழையால் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.. பாதிப்பு குறித்து விரைவில் கணக்கெடுத்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும் தஞ்சை உக்கடை பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு ஆய்வு செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி:

தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட அம்மாபேட்டையை அடுத்துள்ள உக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனும் ஆய்வு செய்தனர்…

விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்களிடத்தில் காண்பித்தனர்…
தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த், வேளாண் இணை இயக்குநர் வித்யா உள்ளிட்டவர்கள் ஆய்வில் பங்கேற்ற ஆய்வுக்கு பிறகு

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்....

மாநிலம் முழுவதிலும் மழையால் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பாதிப்பு குறித்து விரைவில் கணக்கெடுத்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றவர்,

வடகிழக்கு பருவ மழையால் அதிக மழை பெய்ததால் தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு நீரில் மூழ்கியுள்ளது. இதன் தன்மையை துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து கணக்கெடுக்கும் பணி செய்து கொண்டுள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் 947 ஹெக்டேரில் வைத்து நேரில் மூழ்கியுள்ளது மழை விட்ட பிறகு தண்ணீர் வடியும் நிலை பொறுத்து பயிரின் பாதிப்பு 33 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணி நடந்து கொண்டுள்ளது. தற்போது ஆய்வு செய்த உக்கடை பகுதியில் மழை பெய்த தண்ணீர் வழியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 749 ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் 3300 நாகப்பட்டினத்தில் 7681 ஹெக்டேர் மாவட்டத்தில் 822 ஹெக்டர் ராமநாதபுரம் மாவட்டத்திலும், 958 திருவாரூர் மாவட்டத்திலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேர் கடலூர் 500 ஹெக்டர் அளவிற்கு தற்சமயம் நீரில் மூழ்கியுள்ளது என கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வேளாண் துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் என தமிழக முழுவதும் விவசாயிகளின் நிலையை கவனித்துக் கொண்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று கொண்டுள்ளது. தமிழக முதல்வர் வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலம் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் தஞ்சை மாவட்டத்திற்கு அரவிந்த் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோல் மழை தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது படியாத பட்சத்தில் பாதிப்பு ஏற்படும். தற்போது மூன்று ஆண்டுகளாக c & d வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எந்தெந்த வாய்க்கால் தூர்வாரவில்லையோ அந்த வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு தூர் வருவதற்கு 75 கோடி ஒதுக்கீடு செய்து பணி நடந்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் எந்தெந்த பகுதி பாதிக்கப்படும் என கணக்கெடுப்பு செய்து நீர்வளத்துறை அதிகாரியிடம் தெரிவித்து அதற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார்..

What do you think?

மழையால் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது

நெல்லை பொதுமக்கள் கொதிப்பு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்