ஸ்ரீ ரமண பகவானின் 145 – வது ஜெயந்தி விழா…
ரமண பகவான் பாடலைப் பாடி சாமி தரிசனம் செய்த இசைஞானி இளையராஜா…
1879 ஆம் ஆண்டு திருச்சூழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான்.
திருவண்ணாமலை – செங்கம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ரமண பகவானின் ரமணாசிரமம்.
ஒவ்வொரு ஆண்டும் ரமண பகவானுக்கு மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அதன்படி 145- வது ஜெயந்தி விழா இன்று ஆசிரமத்தில் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கிய ஜெயந்தி விழாவில் ரமண பகவானுக்கு ஆசிரமத்தில் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுத்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ரமண பகவானுக்கு பஞ்ச
கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இந்த ஜெயந்தி விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு ரமண பகவானின் பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தார்.
ரமண ஜெயந்தி விழாவில் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான ரமண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து இசைஞானி இளையராஜாவுக்கு ரமண ஆசிரமம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது..