in

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்தும் 14-ஆம் ஆண்டு காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்தும் 14-ஆம் ஆண்டு காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை

 

நதிகளை தூய்மையாக வைத்து வணங்க வேண்டும் என வலியுறுத்தி சுவாமி ராமானந்த மகரிஷி தலைமையில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்தும் 14-ஆம் ஆண்டு காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆரத்தி விழா.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் அண்ணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறங்கட்டளையின் சார்பாக சுவாமி ராமானந்த மகரிஷி தலைமையில் காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை சன்னியாசிகள் கடந்த 20/11/24 அன்று தலைக் காவிரியில் துவங்கி 13/11/24 இன்று காவிரி கடலோடு கலக்கும் பூம்பூகாரில் நிறைவு பெறுகிறது.

அதனையொட்டி, சன்னியாசிகளுக்கு நேற்று மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில், துலா கட்ட காவிரி பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த முத்துகுமார் மற்றும் அப்பர்சுந்தரம் ஆகியோர் வரவேற்பு தந்தனர்.

அதனையொட்டி, சன்னியாசிகள் காவிரிக்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் செய்து, காவிரியை பாதுகாப்போம், காவிரியை வணங்குவோம். நதிகளில் பாலிதின் பொருட்களை போடுவதை தவிர்ப்போம் என சங்கல்ப்பம் எடுத்து கொண்டனர். இந்த காவிரி பாதுகாப்பு சன்னியாசிகள் குழுவை மயிலாடுதுறை இந்து முன்னனியினரும் பொதுமக்களும் வரவேற்று ஆசி பெற்றனர்.

What do you think?

சாந்தா சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா சந்தனக் கூடு திருவிழா

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் ஐப்பசி கோலாட்ட விழா