in ,

150 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி ஆலயம் மகா கும்பாபிஷேகம் 

150 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி ஆலயம் மகா கும்பாபிஷேகம் 

 

காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் எழுந்தருளியுள்ள 150 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறை அருள் பெற்றனர்.

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாநகரின் மையத்தில் போற்றாம் பாளையம் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு துவங்கி அனைத்தும் பணிகளும் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜை நேற்று காலை முதல் கால பூஜையில் விக்னேஸ்வர பூஜை கணபதி ஓமம் நவக்கிரக ஓமம் லட்சுமி ஹோமம் என தொடங்கி, மாலையில் வாஸ்து ஓமம் , கும்பாலங்காரம், பூர்ணாஹதியுடன் மற்றும் முதற்கால யாகசாலை பூஜை நினைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலை ஆகசாலை பூஜை மகா செங்கல்பம் மற்றும் மகாபூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ரேணுகாம்பாள் வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசாமி குரு பகவான் மற்றும் 6 பரிவார மூர்த்தி களுக்கும் அமைக்கப்பட்டிருந்த திருக்குடங்கள் புறப்பாடு கண்டு விமான கோபுர மற்றும் மூலவர் சன்னதிகளுக்கு ஆலய ஆர்ச்சகர் ராஜேஷ் சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் ரேணுகாதேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான கலந்து கொண்டு இறையருள் பெற்றதுடன் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவினை செல்வ விநாயகர் ரேணுகா தேவி அம்மன் ஆலய ஆன்மீக மற்றும் சமுதாய சேவா அறக்கட்டளை மற்றும் கோட்ராம்பாளையத்தெரு அன்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

What do you think?

குற்றங்களை மறைபதற்காக நடிகர்கள் ராஜினாமா

என் ஐ டி கல்லூரி போராட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேட்டி