in

வடலூர் சன்மார்க்க சத்திய தர்ம சாலையின் 158 ஆவது ஆண்டு துவக்க விழா

வடலூர் சன்மார்க்க சத்திய தர்ம சாலையின் 158 ஆவது ஆண்டு துவக்க விழா

 

கடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் வடலூர் சன்மார்க்க சத்திய தர்ம சாலையின் 158 ஆவது ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடலூரில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் திரு அருள் பிரகாச வள்ளலார் அவர்கள் ஆசியுடன் கடலூரில் அவர் பாதம் பட்ட இடமான சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் வள்ளலார் கோவிலாக பீச்ரோடில் இன்று உள்ளது.

இக்கோவிலில் தினமும் மகாதீபாரதனை வழிபாடும் அன்னதானங்களும் வள்ளலாரின் ஆசியுடன்சிறப்புடன் செயல்படுகிறது.

வடலூரில் வள்ளலார் நிறுவிய தர்மசாலை 158 ஆம் ஆண்டுகள் தொடக்கம் பெறுவதை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள வள்ளலார் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

கடலூரில் பீச் ரோட்டில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த வள்ளலார் சுவாமிகள் அமர்ந்த பகுதியே பீச் ரோட்டில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கமாக அழகான கோவிலாக உள்ளது.

இன்று 158 ஆண்டு வடலூரில் வள்ளலார் துவங்கிய இந்த நன்நாளில்
சிறப்பு வழிபாடு அகவல் ஓதுதல் சிறப்பு சொற்பொழிவு மற்றும் திருவருட்பா இசைமாமணி மதிப்புறு முனைவர் ஜீவ சீனிவாசன் அவர்களின் இன்னிசை கச்சேரியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மகாதீபாரதனைக்கு பின்னர் அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

What do you think?

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து நேரில் சென்று பாராட்டு

25 இலட்சம் ரூபாய் கடனுக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான வீட்டை கிரையம்