in

கூலிப்படையை கொண்டு கடத்திச்சென்று தொழிலதிபரிடம் 16 லட்சம் பணம் பறிமுதல் – போலீசார் விசாரணை

கூலிப்படையை கொண்டு கடத்திச்சென்று தொழிலதிபரிடம் 16 லட்சம் பணம் பறிமுதல் – போலீசார் விசாரணை

 

நண்பர் போல பழகி கூலிப்படையை கொண்டு கடத்திச்சென்று தொழிலதிபரிடம் 16 லட்சம் பணம் பறிமுதல் – போலீசார் விசாரணை.

திருச்சி கேகே நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நடத்திவருகிறார்.

மணிகண்டனுடன் கடந்த இரண்டு மாதங்களாக தொழில் ரீதியாக பழகிவந்த காரைக்குடியைச் சேர்ந்த பாலு மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மணிகண்டன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தை பார்க்கவேண்டும் என்றும் அதேபோன்று, இடம் விற்பனை தொடர்பாக பேசவேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்திற்கு வருவதாக தெரிவித்து இருந்தனர்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்து வைத்திருந்தபோது, அலுவலகத்துக்கு வந்த பாலு மற்றும் கணேசன் ஆகிய இருவருடன் அடையாளம் தெரியாத 5 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியதுடன், மேலும் அவரது முகத்தில் மயக்க மருந்தை தெளித்து மணிகண்டனின் காரிலேயே கடத்திச்சென்றுள்ளனர்.

கீரனூர் அருகில் உள்ள காட்டில் வைத்து மிரட்டி அவரது ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட காசோலை மூலம் வங்கிகணக்கில் இருந்து 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், ஏடிஎம் மூலம் பணம் பரிமாற்றம் செய்து 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 16 லட்சம் பணத்தை மிரட்டி பறிமுதல் செய்துள்ளனர்.

பணம் தங்களது கையில் கிடைத்த பிறகு தனியார் நிறுவன உரிமையாளரை செல்போன் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். மேலும் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, அல்லது தகவல் தெரிவித்தாலோ கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் கடந்த இருதினங்களாக அச்சத்தில் இருந்த மணிகண்டன் தற்போது நண்பர்கள் அளித்த உத்வேகத்தின் காரணமாக, திருச்சி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் மற்றும் குற்றவியல் போலீசார் இருவரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

போலீசார் நண்பர் என்ற பெயரில் பழகி தன்னை கடத்தி, மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் மணிகண்டன் தெரிவித்தார்.

What do you think?

ஆன்லைன் மூலம் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும் என மோசடி செய்த இருவர் கைது

புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசின் மானியம் வழங்கப்படும்