1671 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை மாநகராட்சியில் பணியாற்றும் 1671 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு மற்றும் உபகரணங்கள் கொடுத்தல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் என பல்வேறு நிகழ்வுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சியில் பணியாற்றும் 1671 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கும் விழா நெல்லை வண்ணார்பேட்டை குலவணிகர்புரத்தில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம் மைதீன்கான் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சிலையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிப்பாண்டியன், சித்திக், மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், தர்மன், மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜாஇக்லம்பாசிலா, மாமன்ற உறுப்பினர்கள் சகாயஜூலியட் மேரி, சுப்புலட்சுமி, உள்ளட்டவர்கள் கலந்து கொண்டனர்.