in

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது

 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, கைதான 17 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு தர கூறி மீனவர்களும் அவ்வப்போது போராட்டம் செய்து வருகிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசை இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 17 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை 17 பேரையும் கைது செய்தது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள்.

What do you think?

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மத்திய இணை அமைச்சா் ஆய்வு

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத சிறப்பு அபிஷேக ஆராதனை