in

உலகப் புகழ்பெற்ற ஓவியர் ராஜாரவி வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 177 மாணவர்கள் ஓவியம் சிலம்பம் யோகா


Watch – YouTube Click

உலகப் புகழ்பெற்ற ஓவியர் ராஜாரவி வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 177 மாணவர்கள் ஓவியம் சிலம்பம் யோகா உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்பு.

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் அப்புவர்மா இவர் ஓவியர் ராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார். இந்த நிலையில் வருடம் தோறும் ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் இவரது அப்பு வர்மா ஆர்ட் கேலரி ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் சேவா டிரஸ்ட் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தென்குடியில் ராஜா ரவி வர்மாவின் 177வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியம் யோகா சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன இந்த போட்டியினை நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.

இதில் மாணவர்கள் யோகாசனம் பத்மாசனம் சூரியா சனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மாணவர்கள் செய்து காண்பித்தனர். இதேபோன்று மாணவர்கள் ஓவியப் போட்டியில் பாரதியார் சிவபெருமான் ரவிவர்மா உள்ளிட்ட புகைப்படங்களை வரைந்து அசத்தினர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகளை அப்பு வர்மா வழங்கினார்


Watch – YouTube Click

What do you think?

பணி நேரத்தில் மது,குடிபோதையில் பெண்களிடம் தகறாறு செய்யும் அரசு ஊழியர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி