in

சரக்கு லாரி மீது பக்தர்கள் வந்த வேன் மோதி 18 பக்தர்கள் படுகாயம்

சரக்கு லாரி மீது பக்தர்கள் வந்த வேன் மோதி 18 பக்தர்கள் படுகாயம்

 

திருவெறும்பூர் அருகே துவாக்குடி கருப்பு கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பக்தர்கள் வந்த வேன் மோதி 18 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது துவாக்குடி கருப்பு கோவில் இப்பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சரக்கு லாரி ஒன்று திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது திருச்சி சமயபுரம் கோவிலுக்குச் சென்று சுவாமி கும்பிட்டு தஞ்சை புதுக்கோட்டையை சேர்ந்த 18 பேர் வேன் ஒன்றில் வீட்டிற்கு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சென்ற பொழுது அதிகாலை 4 மணி அளவில் துவாக்குடி கருப்பு கோவில் அருகே வந்த பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் வேனில் பயணித்த பக்தர்கள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் விரைந்து வந்து வேனில் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவர்கள் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் டிரைவர் தூக்க கலக்கத்தில் மோதினாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். காயம் பட்டவர்கள் தஞ்சை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் லாரி டிரைவர் மற்றும் வேன் டிரைவரை பிடித்தால் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

What do you think?

சேது எக்ஸ்பிரஸ் மூன்று பெட்டிகள் கழன்று நின்ற சம்பவம் – 30 நிமிடம் ரயில் தாமதம்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா மறைந்தார்