திருச்சியில் முதல்முறையாக 1942-ல் இருந்த பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சி
திருச்சி டி.ஜே அழகேந்திரன் ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக திருச்சி பறவைகள் சாலை பகுதியில் நாடு சுதந்திரம் அடைந்த நாட்களில் வந்த கார் முதல் பழைய கார்கள் மற்றும் 1942 பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் கண்காட்சி இன்று தூங்கியது.
இந்த கண்காட்சி குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் கூறுகையில்:-
இந்த கண்காட்சியில் பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட 6 கார்களும், 66 இருசக்கர வாகனங்களும் மற்றும் பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி கடிகாரம் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக இலவசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலத்தில் உள்ள மாணவ மாணவிகள் இளைஞர்கள் உள்ளிட்டோர் பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
குறிப்பாக பழைய காலத்து பைக்குகளை சரி செய்ய அந்த காலத்து மெக்கானிக்கல் மட்டுமே முடியும் எனவே அவர்களை தேடி அலைந்தோம். ஜாவா பைக்குகளை சரி செய்ய மைசூரில் ஒருவர் இருந்தார்.
அதேபோல் பிரிட்டிஷ் வண்டியை சரி செய்ய குனக்கூர் பகுதியில் ஒருவர் இருந்தார். மேலும் டிங்கர் ஒர்க் பார்க்க பெங்களூர் பகுதியில் ஒருவர் இருந்தார் இப்படி பழமை மாறாமல் அதேபோல் இருசக்கர வாகனங்கள் அமைய மிகவும் கஷ்டப்பட்டோம்.
மேலும் தற்போதைய குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இன்டர்நெட்டில் மூழ்கி உள்ளனர் அதனை விட்டு இதுபோல் வரலாற்று சிறப்புமிக்க பழைய பொருட்களை சேகரிப்பு என்பது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறையை மாற்ற உதவும் எனவும் தெரிவித்தார் .