சிவகாசி அருகே பயங்கரம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது…
விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே திருத்தங்கல் நாடார் நடுத்தெருவை சேர்ந்த அருண்குமார் இவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் ஆமத்துார் பகுதியில் இயங்கி தனியார் பேப்பர் கம்பெனி பணிபுரிந்து வருகிறார்.சம்பந்தன்று இவர் தனது கம்பெனியில் பணி முடிந்து விட்டு நள்ளிரவு ஆமத்தூரிலிருந்து த பேருந்து மூலம் திருத்தங்கல் அண்ணா சிலை அருகே இறங்கி தனது வீட்டிற்கு நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத போதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் அருண்குமாரை வழிமறித்து அடித்து உதைத்து அருகில் இருந்த கால்வாயில் உள்ளே தள்ளி அவரது பையில் இருந்த பணத்தை பிடிங்கி இரண்டு சிறுவர்களும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
பின்னர் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு சென்று அருண்குமார் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் அருகிலிருந்து CCTV காட்சி மூலம் அடையாளம் காணப்பட்டதில் திருத்தங்கல் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த மாரிச் செல்வம் என்பவரது மகன் பொன்னுமணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் அருண் என்பது தெரிய வந்தன.
இருவரையும் பிடித்து விசாரணையில் இருவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டது தெரிய வந்ததது.இரண்டு சிறுவர்கள் மீது திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.