மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து உருளைக் கிழங்கு லாரியில் 200 கிலோ
புகையிலை கடத்தி வந்த 2 பேர் விருதுநகர் அருகே கைது….
விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு தீக்குச்சி ஏற்றிச் சென்ற லாரி மீண்டும் அங்கிருந்து வரும் போது அங்கிருந்து உருளை கிழங்கு ஏற்றி வந்துள்ளது.
அப்போது உருளை கிழக்கில் மறைத்து வைத்து 200 கிலோ புகையிலையை பொருட்கள் கடத்தி வருவதாக விருதுநகர் எஸ்பி பேரோஸ்கான் அப்துல்லாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைத்து லாரி ஓட்டுநர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்து கண்காணித்து வந்தனர்.
இன்று அந்த லாரி விருதுநகர் அருகே கன்னி சேரி பகுதிக்கு வரும்போது லாரியை மடக்கி பிடித்த போலீசார் அதில் சோதனை செய்தபோது உருளைக்கிழங்கு மூட்டைகளுக்கு நடுவில் 200 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த சுரேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காய்கறி ஏற்றி வந்த லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.