20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும்
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய 20000 ஆசிரியர்கள் அதாவது 2009 மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் பணியில் அமர்ந்த
20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கை 311-ல் அறிவித்திருந்தார்கள்.
அந்த தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
அதன் அடிப்படையிலே இன்றைக்கு நாங்கள் கடந்த 12 நாட்களாக சென்னை முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பல்வேறு கட்ட போராட்டங்களை கையில் எடுத்திருக்கிறோம்.
தற்போது கூட கடலூர் மாவட்டம் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாம் நாள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம்.
இதுபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாம் நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தங்களது பிறந்த நாளான பொன்னான நாளில் இந்த 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாட்டை கலையக்கூடிய அரசாணை வழங்கி எங்களது குடும்பங்களை வாழ வைப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு நாங்கள் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறோம்.