2014 திருவேங்கடம் கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு
கடந்த 2014 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் உடைப்பன் குளம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஜாதிய ரியதியில் நடந்த பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் அதனை மனதில் வைத்துக்கொண்டு ஒரு தரப்பு மற்றொரு தரப்பை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவர்கள்
சங்கரன்கோவிலில் நீராட்டு விழாவிற்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற காளிராஜ்(45) வேணுகோபால் (42) மற்றும் முருகன் (40) ஆகியோரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர் இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 25 நபர்கள் மீது திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
இவ்வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் உப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி,குட்டி ராஜ், குருசாமி, கண்ணன், உலக்கன்,காளிராஜ், கண்ணன், பாலமுருகன்,முத்துகிருஷ்ணன்,கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய 11 நபர்களையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.மேலும் இவர்களுக்கான தண்டனை விபரம் இன்னும் சற்று நேரத்தில் ( 26 ஆம் தேதி) அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்
இந்த நிலையில் இன்று நெல்லை வன்கொடுமை நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார்
பொன்னுமணி குருசாமி முத்துகிருஷ்ணன் காளிராஜ் ஆகியோர
ஆகியோர் மூவரை கொலை செய்த குற்றம் வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த குற்றம் உள்ளிட்டவைகளுக்காக மரண தண்டனை விதிப்பு
மீதம் உள்ள குட்டிராஜ் ,கண்ணன்,உலக்கன்,வேலுசா
மி ,பாலமுருகன் ,5 நபருக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதிப்பு
2 பேருக்கு 2 ஆயுள் கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பு கூறினார்
இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை அழைத்து வந்தனர் இதைத்தொடர்ந்து இரவில் நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை வாசித்த அப்போது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன், பொன்னுமணி ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் குட்டி ராஜ், கண்ணன், உலக்கன், மற்றொரு கண்ணன், முருகன் ஆகியோருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் கண்ணன், சுரேஷ் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்