in

நாகையில் அதிரடி சோதனை 21 பேர் கைது, 1500 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்


Watch – YouTube Click

நாகையில் அதிரடி சோதனை 21 பேர் கைது, 1500 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் எதிரொலியாக கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு பகுதியாக கடந்த 24 மணிநேரத்தில் வெளிப்பாளையம், கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரணியம், நாகப்பட்டினம் நகர காவல் நிலையம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, ஆகிய காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 1500 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் முறையாக கோப்புகளை பராமரிக்கும் உத்தரவு பிறப்பித்தார்கள்,

இதனை தொடர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் இடையே உள்ள வாஞ்சூர் மதுவிலக்கு சோதனை சாவடி வாகன சோதனையில் ஈடுபட்டார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் நிர்ணயம்

கிராமிய கலைஞர்கள் கலை பண்பாட்டு துறை முன்பாக மேள தாளம் இசையுடன் ஆர்ப்பாட்டம்