23 ஆபரேஷன்…. காலை எடுக்க வேண்டிய நிலை….நடிகர் விக்ரமின் உருகமான பதிவு
அண்மையில் நடந்த தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிதாமகன், ராவணன், ஐ, போன்ற படங்களில் நான் நடித்த போது பட்ட கஷ்டங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அவையெல்லாம் ஒன்றுமே கிடையாது தங்களான் படத்திற்காக நான் நிஜமாகவே நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
சிறுவயதிலேயே சினிமா தான் என்னுடைய வாழ்க்கை என்று நான் முடிவு பண்ணிய பிறகு முதல் மூன்று ரேங்க்குகளில் இருந்த நான் கடைசி மூன்று ரேங்க்….இக்கு சென்றேன்.
பிறகு கல்லூரியில் சேர்ந்த போது பிளாக் காமெடி என்ற நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற விருதை கொடுத்தார்கள். ஆனால் அந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை அன்றைக்கு நான் விபத்தில் அடிபட்டு கால் முரிந்து விட்டது.
என் காலையே வெட்டி எடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறிய போது என் அம்மா அழ ஆரம்பித்து விட்டார். பிறகு 23 ஆபரேஷன் செய்தார்கள் அதன் பிறகும் என்னால் நடக்கவே முடியாது என்று டாக்டர் கூறினார்.
குடும்ப கஷ்டத்தின் காரணமாக ஸ்டிக் வைத்துக் நடந்து தான் வேலைக்கு சென்றேன். அப்பொழுது எனக்கு வெறும் 750 ரூபாய் தான் சம்பளம் கடுமையான பயிற்சிக்கு பிறகு ஸ்ட்ரிக் இல்லாமல் தானாக நடக்க பழகினேன்.
நம் கனவை நோக்கி நாம் ஓடினால் நிச்சயம் அது நிறைவேறும் நான் நடிகனாக இல்லாவிட்டால் இன்னமும் நடிகனாக வேண்டும் என்று நான் முயற்சி செய்து கொண்டிருப்பேன் என்று விக்ரம் கூறினார்.