in ,

மூங்கிலம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு ஆடிபுரம் ஊஞ்சல் உற்சவம்

மூங்கிலம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு ஆடிபுரம் ஊஞ்சல் உற்சவம்

 

திண்டிவனம் கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு ஆடிபுரத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தீர்த்தக்குளம் பகுதியில் அமைந்துள்ள திண்டிவனம் கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் 23 ஆம் ஆண்டு ஆடிபுரத்தை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மூங்கில் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாராணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மன் உட்பிரகாரம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

மூலவர் அம்மன் வளையல்கள் கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் வெகு சிறப்பாக காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

What do you think?

மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு விளக்கு பூஜை

ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரம்