in

திருவாவடுதுறை ஆதீனத்தில் 23 வது குருமூர்த்திகளின் குருபூஜை விழா சிறப்பு அபிஷேக, ஆராதனை

திருவாவடுதுறை ஆதீனத்தில் 23 வது குருமூர்த்திகளின் குருபூஜை விழா சிறப்பு அபிஷேக, ஆராதனை

 

திருவாவடுதுறை ஆதீனத்தில் 23 வது குருமூர்த்திகளின் குருபூஜை விழா சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் 14ம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட தொன்மையும் முதன்மையுமான சைவ ஆதீனம் அமைந்துள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்தின் 23 வது குருமகா சன்னிதானமாக அருளாட்சி செய்த சிவப்பிரகாச தேசிய பரமாசாரிய சுவாமிகள் 2012 ஆம் ஆண்டு கார்த்திகை சதயம் நாளில் பரிபூரணமடைந்தார்.

தொடர்ந்து ஆண்டு தோறும் கார்த்திகை சதயம் திருநாளில் 23 வது குருமூர்த்திகளின் குருமூர்த்தத்தில் குருபூஜை நடைபெறும். இவ்வாண்டு கார்த்திகை சதயம் திருநாளான நேற்று திருவாவடுதுறை மறைஞான தேசிகர் தபோவனத்தில் அமைந்துள்ள 23 ஆவது குருமூர்த்தி சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.

குருபூஜையை முன்னிட்டு 23வது குருமூர்த்திகளின் குரு மூர்த்தத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்து வைத்தார்.

தொடர்ந்து குரு மகா சன்னிதானம் குருபூஜை நூல்களை வெளியிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மாகேஸ்வர பூஜை நடந்தது.

What do you think?

தவெக தலைவர் விஜய் சொல்வது 100% உண்மை

தருமபுர ஆதீன 26வது மடாதிபதியின் 5ம் ஆண்டு குருபூஜை விழா