in

புதுச்சேரி ஆரோவில்லில் 25வது தேசிய குதிரையேற்ற போட்டி


Watch – YouTube Click

புதுச்சேரி ஆரோவில்லில் 25வது தேசிய குதிரையேற்ற போட்டி

 

புதுச்சேரி அடுத்துள்ள ஆரோவில்லில் RED EARTH குதிரை ஏற்ற பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இதன் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான குதிரை ஏற்ற போட்டி நடத்தப்படுகிறது.

25 வது ஆண்டு தேசிய குதிரையேற்ற போட்டி இன்று துவங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் பெங்களூர், கோயம்புத்தூர், சென்னை, ஆம்பூர், ஊட்டி, புதுச்சேரி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இருந்து 160 குதிரைகளும் 140 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

முதலாவதா Dressage எனப்படும் கீழ்படிதல் பிரிவில் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

டிரஸ்சாஜ் என்றால் குதிரையை பயிற்றுவித்தல், குதிரைக்கும் வீரருக்கும் உள்ள பயிற்சி மற்றும் அதனை எப்படி கட்டுப்படுத்துதல் என்பதாகும்

தொடர்ந்து ஜூனியர் தடைதாண்டும் போட்டி நடந்தது. இதில் சென்னை, ஊட்டி, பெங்களூரு வீரர்கள் பங்கேற்று தடைகளை தாண்டினார்கள். குறைந்த நேரத்தில் பிழையின்றி தடை தாண்டியவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு 31ம் தேதி பரிசளிப்பு விழாவில் அளிக்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

மோசமான பித்தலாட்ட பாஜகவை ஒழித்துகட்ட வேண்டிய தேர்தல் – சிவா, எம்.எல்.ஏ

தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் தே மு தி க சுதீஷ் பேச்சு