in ,

மினரல் வாட்டர் டாடா ஏசி வாகனத்தை திருடிய 3 பேர் கைது

காரியாபட்டியில் விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக மினரல் வாட்டர் டாடா ஏசி வாகனத்தை திருடிய 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நான்கு வழிச்சாலை அருகே லிங்கச்சாமி என்பவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் வைத்துள்ளார்.

இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை டாட்டா ஏசி வாகனம் மூலம் கிராமங்களில் விநியோகம் செய்து வரும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி அவரது இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினரல் வாட்டர் டாட்டா ஏசி வாகனம் காணாமல் போய் உள்ளது.

உடனே லிங்கச்சாமி காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் சமீளாபேகம் தலைமையிலான தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் எஸ்.கல்லுப்பட்டி கண்மாய் பகுதியில் மினரல் வாட்டர் டாடா ஏசி வாகனம் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் டாட்டா ஏசி வாகனத்தை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து தகவல் வெளியானது. அதில் பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (24) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மினரல் வாட்டர் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்துள்ளார். திடிரென்று வேலையை விட்டு நின்ற அஜய் ஒரு விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது நண்பர்களான பணிக்கனேந்தலை சேர்ந்த அருண் பாண்டியன் (23), பிச்சம்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகன் (24) ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து அஜய் முன்னாள் வேலை செய்த இடத்தில் இருந்த மினரல் வாட்டர் டாட்டா ஏசி வாகனத்தை திருடி விற்பனை செய்வதற்காக திட்டம் தீட்டி உள்ளனர்.

மூன்று பேரும் லிங்கச்சாமியின் மினரல் வாட்டர் பிளாண்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை அதிகாலையில் எடுத்து தலைமறைவாகி எஸ்.கல்லுப்பட்டி கண்மாய் பகுதியில் பதுக்கி வைத்திருந்து அதனை உடைத்து விற்பனை செய்து விலை உயர்ந்த டூவீலர்கள் வாங்கலாம் என எண்ணி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

காரியாபட்டி போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What do you think?

விருதுநகரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

வீடுகளை அகற்றுவதாக பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ்