திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் மாநில அளவில் நடைபெற்ற இளையோர் பெண்கள் கபடி போட்டியில் ஈரோடு அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது….
தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொள்ள வீராங்கனைகள் தேர்வு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருவண்ணாமலை அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் 50 வது மாநில இளையோர் பெண்கள் கபடி போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை ஈரோடு அணிகள் மோதியதில் ஈரோடு அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஈரோடு அணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆகியோர் கோப்பை மற்றும் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொள்வதற்கு பெண்கள் அணியை தேர்வு செய்யும் பொருட்டு மாநில அளவில் விளையாட்டு போட்டி 3 நாட்கள் நடைபெற்றது…
குறிப்பாக 65 கிலோவிற்கு கீழ் மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகள் திருவண்ணாமலை, ஈரோடு, சென்னை, விருதுநகர், கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் 37 மாவட்டத்தில் இருந்து 532 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது, இதில் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இரண்டு அணிகள் மோதியதில் ஈரோடு அணி வெற்றி பெற்றது. இரண்டாவது தனியாக சென்னையும், மூன்றாவது அணியாக திருவள்ளூர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
இதுமட்டுமின்றி கபடி போட்டியில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்த்து டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுகின்றனர்.