in

3 கடைகளை உடைத்து மூன்றே கால் லட்சம் கொள்ளை


Watch – YouTube Click

3 கடைகளை உடைத்து மூன்றே கால் லட்சம் கொள்ளை

 

புதுச்சேரி…அதிகாலையில் மூன்று கடைகளை உடைத்து மூன்றே கால் லட்சம் ரூபாய் கொள்ளை… விலை உயர்ந்த பைக்கில் வந்து கொள்ளையடித்த முகமூடி ஆசாமியை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்…

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (40). இவர் ஆரியப்பாளையம் பைபாஸ் அருகே பேக்கரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பேக்கரியை மூடிவிட்டு சென்றுள்ளார். பிறகு இன்று காலை 6 மணியளவில் வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷெட்டர் திறந்த நிலையில் இருந்துள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த பாலமுருகன் கடையின் கல்லா பெட்டியில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை பார்த்தபோது அவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் கிரைம் போலீசார் எழில்ராஜ், செந்தில்முருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இன்று அதிகாலை 3.50 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து கடையின் ஷெட்டரை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியை திறந்து அதில் இருந்த பணத்தை கையில் மூட்டைக்கட்டி தூக்கில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பிறகு போலீசார் தடவியியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இதேபோன்று இதற்கு முன்னதாக வில்லியனூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள மூப்பனார் காம்ளக்சில் இயங்கி வரும் சேகர் என்பவருக்கு சொந்தமான காபி கடையின் பூட்டை உடைத்து ரூ.95 ஆயிரம் பணமும், அருகில் இருந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் பணமும் கொள்ளை அடித்துள்ளார் என்பது தெரியவந்தது.

பிறகு இதுசம்பந்தமாக வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

15 வழக்கறிஞர்கள் புதிய நீதிபதிகளாக பணி நியமனம்

போலீஸார் வாகனம் மோதி இருவர் காயம் ஒருவர் பலி