புதுச்சேரியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர் கைது
புதுச்சேரியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தானாம்பாளையம் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தவளக்குப்பம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற மூன்று பேரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், மணப்பட்டு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, சுக்காராம், முரளி என்பதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதன் பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்