புதுச்சேரியில் 305 காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….
புதுச்சேரி காவல்துறையில் கடந்த சில தினங்கள் முன்பு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் 400க்கும் மேற்பட்டோர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இது காவல்துறையில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் 305 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிக அளவில் புதுச்சேரி ஆயுதப்படையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவு புதுச்சேரி காவல் துறை தலைமையக எஸ்.பி, சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்…