in

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்


Watch – YouTube Click

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி ஊர்வலவமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் ஆலய பங்குதந்தை பால்ராஜ் தலைமையில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆலய கொடி மரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. அதனை அடுத்து நவ நாட்களில் தினந்தோறும் காலை மாலை திருப்பலிகள் நடைபெற உள்ளன. 13-ம் தேதி பெருவிழா ஆடம்பர தேர்பவணி நடைபெற உள்ஐது. இதில் திரளான ஊர் பொதுமக்கள், இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை தொழில் போட்டியில் ஒருவர் பலி

 நெடுஞ்சாலையில் 50 ஆண்டு நாகமரம் பச்சை மரம், தீ பற்றி எரிந்தது