in

தேவகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 36 ஜோடி மாடுகள் பங்கேற்பு.


Watch – YouTube Click

தேவகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 36 ஜோடி மாடுகள் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேலாயுதப்பட்டினத்தில் அருள்மிகு தர்ம முனீஸ்வரர் ஆலய 58 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாட்டுப் பிரிவிற்கு 8 மைல் தூரமும், நடுமாட்டுப் பிரிவிற்கு 7 மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு 6 மைல் தூரமும், பந்தைய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டன. பெரியமாட்டு பிரிவில் 10 மாட்டு வண்டிகளும், நடு மாட்டு பிரிவில் 12 மாட்டு வண்டிகள், சிறிய மாட்டு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. வேலாயுதப்பட்டினம் – தேவகோட்டை சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முன்னேறிச் சென்றன. போட்டியினை தேவகோட்டை, வேலாயுதப்பட்டினம், கல்லல், உசிலங்கோட்டை, வேப்பங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர். போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கும், கொடி பரிசு சாரதிக்கும், ரொக்கப் பரிசாக வழங்கிய கௌரிவிக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ரசிகர் மன்ற தலைவரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு நாளை தொடங்கப்பட உள்ளது