in

கடந்த ஆண்டு பணவீக்கத்தை கணக்கிட்டால் 13,600 ரூபாய் தேவைப்படுகிறது என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்ட நகல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு 12,700 கோடி ரூபாய் போதாது.கடந்த ஆண்டு பணவீக்கத்தை கணக்கிட்டால் 13,600 ரூபாய் தேவைப்படுகிறது என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்ட நகல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…

புதுச்சேரி அரசு சார்பில் 2024-25 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 2ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரவு-செலவு திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமதாஸ் வெளியிட்டார் அதனை கழகத்தின் சேர்மன் RL வெங்கட்டராமன் பெற்றுக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்த அவர்,புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுக்கும் மானிய உதவியினை 30 சதவிதமாக உயர்த்தவும் புதுச்சேரிக்கான கடனை தள்ளுபடி செய்யவும் மத்திய திட்டங்களுக்கு 100% நிதி அளிக்கவும் கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.

சொந்த வரி வருவாயை உயர்த்த வேண்டும் பழைய வரிப்பாக்கியை வசூல் செய்ய வேண்டும் தேவையற்ற செலவினங்களை குறைக்க வேண்டும் என அரசுக்கு ஆலோசனை கூறிய பேராசிரியர் ராமதாஸ்,சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து, உள்ளாட்சித் தேர்தல், புதுச்சேரிக்கான நிதி ஆயோக் போன்றவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார் தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் காலை உணவு திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும் தொழில்நுட்பம் பூங்கா,ஜவுளி பூங்கா, மென்பொருள் பூங்கா ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

அரசு தற்பொழுது முடிவு செய்துள்ள 12,700 கோடி ரூபாய் போதாது.கடந்த ஆண்டு பணவீக்கத்தை கணக்கிட்டால் 13,600 ரூபாய் தேவைப்படுகிறது.புதுச்சேரியில் சொந்த வருவாய் 8775 கோடி,4150 ரூபாய் பெற வேண்டு,675 கோடி ரூபாய் கடன் பெற வேண்டும் என ராமதாஸ் பட்டியலிட்டார்…

நிகழ்ச்சியில் கழகத்தின் சேர்மன் RL வெங்கட்டராமன், மாநில துணை தலைவர் VM. ஆனந்தன் , பொருளாளர் செல்வகுமாரி ,மாநில செயலாளர்கள் பரந்தாமன் , ரவிகுமார் , சிவகுமாரன் , இணை செயலாளர் சுப்ரமணி ,உதவி செயலாளர் ஆண்டாள் , கருணாநிதி , மீனவர் அணி தலைவர் சந்திரன் , மகளிர் அணி தலைவர் விமலா பெறியாண்டி மற்றும் கழகத்தின் மாநில நிர்வாகிகள்,மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் தவறாமல் திரளாகக் கலந்து கொண்டனர்.

What do you think?

மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அவசர கதியில் திணிப்பு ஆசிரியர்கள் போராட்டம்